இன்சுவையே எமனாகும்!
(மோனோசோடியம் குளுடாமேட்)
இனிய மாலைப்பொழுது.
இணைந்து குடும்பத்துடன்
செல்லும்இடம் -
துரித உணவகம்.
சூடாய் சூப் வகைகள்.
அறுசுவை உணவு.
அத்தனையும் அருமை.
எப்படிக் கிடைக்கிறது இந்த சுவை.
பார்த்துப் பார்த்து பாட்டி சமைத்ததில்
இல்லா சுவை இதில் எப்படி ?
சிந்தித்ததுண்டா?
மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட்
செய்யும் மோ(ச)டி வித்தை தான் அது.
மோனோசோடியம் குளுடாமேட்
ஒரு சுவை கூட்டி.
1909ல் தொடங்கியது இதன் அறிமுகம்.
அறிமுகமான நாள் முதல் அதை வெல்ல
ஆளே இல்லை மார்கட்டில்.
அறிமுகம் ஜப்பானில்.
அகில உலக சாப்பாட்டுப் பிரியர்களும்
அடிமை இதற்கு.
முதலில் கோதுமையிலிருந்து
பிரித்தெடுக்கப்பட்டது
குளுடாமிக் அமிலம்.
அதைத் தான் முதலில் ஜப்பானில்
சூப்களில் சுவை கூட்ட
பயன் படுத்தினார்கள்.
அமெரிக்காவில், "பொதுவாக பாதுகாப்பான
பொருள் பட்டியலில் "உப்பு, மிளகு, வினிகர்
ஆகியவற்றுடன் மோனோசோடியம்
குளுடாமேட்டும் இடம் பெற்றுள்ளது.
ஐரோப்பிய யூனியனிலும்
மோனோசோடியம் குளுடாமேட்
பாதுகாப்பான உணவுப் பட்டியலில்
வருகிறது.
1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின்
முகத்திரை கிழிந்தது. சீன உணவகம் ஒன்றில்
உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல்,
உடலில் மதமதப்பு, உடலின் மேல் பகுதியில்
இறுக்கம் ஆகிய உபாதைகளை உணர்ந்தனர்.
“சீன உணவக உபாதை” என அதற்கு
நாமகரணம் சூட்டப்பட்டது.
சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம்
குளுடாமேட்டே காரணம் என
முடிவு கட்டப்பட்டது.
ஆயினும் அதை நிரூபிக்க முடியவில்லை.
ரசல் பிளேலாக் எழுதிய புத்தகமொன்றில்,
மோனோசோடியம் குளுடாமேட்
நியூரான்களை (மூளைத்திசுக்களை)த்
தூண்டி சுவையை அதிக
அளவில் உணரச் செய்கிறது.
ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்
மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்ஜீமீயர்ஸ்
மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை
அதிகப்படுத்தவும் காரணமாகலாமென
எச்சரித்துள்ளார்.
மோனோசோடியம் குளுடாமேட்
பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருள்
பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில்
மோனோசோடியம் குளுடாமேட்
பயன்படுத்தப்பட்டுள்ளது”
எனக் குறிப்பிடப்பட வேண்டும்.
அதேபோல்,“மோனோசோடியம் குளுடாமேட்
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல”
எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும், எச்சரிக்கையாய் இருங்கள்.
மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை
“இயற்கை சுவைகூட்டி” என்றும் குறிப்பிட்டிருப்பர்.
ஏமாந்து விடாதீர்.
உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே
உண்பதுதான் சாலச்சிறந்தது.
நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல்,
செயற்கை உணவை ஏற்பதில்லை.
மோனோசோடியம் குளுடாமேட்
சேர்க்கப்பட்ட உணவின் மற்றொரு ஆபத்து-
சுவைகூட்டிகள் நாம் உண்ணும்
உணவின் அளவை அதிகரித்து
உடல் எடையைக் கூட்டும்-கவனம்.
எனவே, மோனோசோடியம் குளுடாமேட்
போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே
உடலுக்கு உகந்தது.
"மோனோசோடியம் குளுடாமேட்" என்பது
இன்று மார்கெட்டில் பிரபலமாக (சிவந்த நிற
சிறிய பாத்திர முத்திரையுடன்)
விற்கப்படும் ஒரு பொருள்.
கவனமா இருங்க!
நன்றி: உணவு உலகம் வலைப்பூ.
சொடுக்குக:
மார்க்கெட்டில் இந்த
மோனோசொடியம் குளுடாமெட்
எந்தப்
பெயரில் விற்கப்படுகிறது
என்று உங்களுக்கு தெரியுமா?
அஜினோமோட்டோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக