வியாழன், 30 டிசம்பர், 2010


இயற்கையே இறைவன்;
இயற்கை வழி வாழ்தலே இறை வழிபாடு.


யோகக் கலையின் தமிழ் நூலான திருமந்திரம் அருளிய திருமூலநாயனார். உடல் நலத்தின் சிறப்புகளை பலவாறு பாடியுள்ளார்.
''உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவனே சிவலிங்கம்''
என்றும்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பிற்குள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஒம்புகின்றனே.
எனவும்,
உடம்பாரழியிர் உயிராலழிவர் 
திடம்பட மெய்ஞானம் சேரவுமாட்டார்
உடம்பினை வழக்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பினை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
எனவும்,
அண்டம் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கின் உபாயம் பலவுள  
கண்டங் கருத்த கபாலியுமாமே.
என்றெல்லாம் அவர் உடல் நலத்தினை பேணிக்காப்பதைப் பற்றி கூறுகிறார்.
அது போலவே உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் மிக அழகாக இதையே
''மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றியுணின்''
எனவும்,
''மாறுபாடில்லா வுண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு''
எனவும் கூறியுள்ளார்.

செய்தியை தந்தவர்: 
திரு மூ.ஆ.அப்பன்,
இயற்கை நலவாழ்வியல் ஆலோசகர் 
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்)

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

திருமந்திர வரிகள் பயனுடைத்து எனக்குப் பிடித்தது. நன்றி. பயணம் தொடர வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Ashwin Ji சொன்னது…

நன்றி வேதா அவர்களே. தொடர்ந்து பார்வையிட்டு தங்கள் மேலான கருத்தாங்கங்களை அளிக்க வேண்டுகிறேன்.

அன்போடு,
அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக