செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

மருத்துவம் பற்றி காந்தி கூறுவது.

மருத்துவம்: 

"நமது சமுதாயத்தில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மருத்துவர்கள், நம்மை முற்றிலும் நிலைதவறி போகும்படி செய்து விட்டனர். 
நோய்கள் எவ்விதம் உருவாகின்றன? 
நிச்சயமாக நமது அசட்டையினாலோ அல்லது மிதமிஞ்சிய போகங்களினாலோ நோய்கள் உருவாகின்றன. 
நான் அளவுக்கு மிஞ்சி சாப்பிடுகிறேன். எனக்கு அஜீரணம் உண்டாகி, மருத்துவரிடம் போகிறேன். மருத்து கொடுக்கிறார்; குணம் அடைகிறேன். மறுபடியும் நான் அதிகமாக உணவு உட்கொள்கிறேன். மருத்துவரின் மருந்தையும் உட்கொள்கிறேன். 
ஆனால், முதல் தடவையிலேயே மருந்தை உட்கொள்ளாதிருந்தால், எனக்கு உரிய தண்டனையை அனுபவித்திருப்பேன். மறுபடியும் மிதமிஞ்சி உண்டிருக்க மாட்டேன். 
மருத்துவர் குறுக்கிட்டு, மிதமிஞ்சி நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். 
மருத்துவர் தலையிடாமல் இருந்திருந்தால், இயற்கை தன் வேலையை செய்திருக்கும். 
என்னை நானே அடக்கியாளும் ஆற்றலும், எனக்கு உண்டாகியிருக்கும். 
-மகாத்மா காந்தி.