செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

வெள்ளரிக்காய்


உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதில் வெள்ளரிக்கு இணையான காய் வேறு எதுவும் இல்லை. உலகம் முழுவதும் விளைந்தாலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் சீனாவிலும் இந்தியாவிலும் அதிகம் விளைகிறது. 100 கிராம் வெள்ளரியில் உள்ள சத்துக்கள்: நீர்ச்சத்து-96.3 சதம், மாவுச்சத்து-0.4 சதம், புரதம்-0.1 சதம், கொழுப்பு-2.5 சதம், நார்ச்சத்து-0.4 சதம், தாதுக்கள்-0.3 சதம், கலோரிகள்-18, கால்சியம்-10 மி.கி., பாஸ்பரஸ்-25 மி.கி., இரும்புச் சத்து-15 மி.கி., வைட்டமின் சி-7 மி.கி., பி.காம்ப்ளக்ஸ்-சிறிய அளவில். வெள்ளரியில் உள்ள தாதுப்பொருட்களே அதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாக அமைகின்றன. நம் உடலில் உள்ள நீர்கள் (ரத்தம், சிறுநீர்) அடிப்படையில் காரத்தன்மை உடையவை. இந்த காரத் தன்மை குறைந்து அமிலத்தன்மை அதிகமானால் பல நோய்கள் உருவாகும். வெள்ளரியில் உள்ள தாதுப்பொருட்களில் 64.05 சதம் காரத்தன்மை உள்ளது. மீதமுள்ள 35.95 சதம் அமிலத்தன்மை உடையவை. வெள்ளரியில் அதிகமாக உள்ள இந்த காரத்தன்மை நம் உடல் நீர்களின் காரத்தன்மையை பாதுகாப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. வயிற்றிலுள்ள அமிலத் தன்மையை குறைத்து வயிற்றுப்புண்ணை ஆற்றுகிறது. வாதக் கோளாறுகள், சிறுநீரக நோய், கற்கள், காலரா, சருமநோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. வெள்ளரியை தோலோடு உண்பது அதிக பயன்தரும். உபயோகிக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக