செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

உணவின் அமிலத் தன்மையும், காரத் தன்மையும்...


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அவசரகதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடும் நமது வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. நாகரீகம் என்ற பெயரில் தின்பண்டங்கள்,  குளிர்பானம் என்று வாழ்க்கை முறையே இளம் தலைமுறையினரிடம் மாறி விட்டது.  சாப்பிடும் உணவைத் தேர்வு செய்யும் பழக்கம் நமக்கு வர வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்வுக்கு நல்ல ஆலோசனைகளை வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
உணவு வகைகளில் அமிலத் தன்மை கொண்டது என்றும் காரத் தன்மை கொண்டது என்றும் இரு வகைகளாய் பிரிக்கலாம். இவை இரண்டுமே மனிதனின் சராசரி வளர்ச்சிக்கு மிக முக்கியமானவைகள் ஆகும் நாம் உண்ணும் எந்த ஒரு உணவிலுமே இவை இரண்டும் உண்டு.

அமிலத் தன்மை கொண்ட பொருட்கள் பட்டியல்:

File:PH scale.png

இவை ஒன்றுக்கு ஒன்று முரண் ஆனது. ஆகவே உணவில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதாவது அமில வகை உணவு வகைகள் சாப்பிடும் போது கார வகை உணவு வகைகளை சாப்பிடக் கூடாது.  இப்படி ஒரு பழக்கம் இல்லாவிட்டால் அது தான் பிரச்சினை ஆகி நோயாய் மாறுகிறது.
உதாரணத்திற்கு, பழவகைகள் சாப்பிடும் போது தானிய வகை, பயறு, அசைவ உணவு சேர்க்கக்கூடாது.
பால் வகை உணவுகள் சாப்பிடும் போது சிற்றிக் அமிலத் (Citric Acid) தன்மை கொண்ட ஆரஞ்சு,  எலுமிச்சை கூடாது.
அசைவ உணவுக்கு பால்,  தயிர் சரியல்ல ஜீரணக் கோளாறு வர வாய்ப்பு அதிகம்.
பூசணி போன்ற நீர்வகை காய்களுடன் சிட்ரிக் அமில வகைப் பழங்கள் கூடாது.
முள்ளங்கிக்கு பால் வகை பொருட்கள், வாழைப்பழம் எதிரி.
அதிக புரோட்டீன் உள்ள முட்டையுடன் மீன்,  பால்,  பூசணி போன்றவற்றை சேர்த்து உண்ணுதல் உடல் நலக்கேட்டை வரவழைக்கும்.
பழைய சாதமுடன் சூடான சாதத்தைக் கலந்து சாப்பிடுவதும் சரியல்ல.
உணவு வகைகளை உடலுக்குள் தள்ளும் போது கவனமுடன் பார்த்து தள்ளாவிடில் அது நம்மை நோயில் கொண்டு தள்ளி விடும்.
உணவு உடலில் சென்றதும் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் அவ்வாறு நிகழும் வேதியியல் மாற்றத்தைப் பொறுத்துத் தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது.
நன்றி: http://tconews.wordpress.com