புதன், 11 செப்டம்பர், 2013

உணவு உப்பு மயம் ; உலகம் துன்ப மயம் !

உப்பு தப்பு.

உணவு உப்பு மயம்: உப்பு ஒரு தப்பு தான்,சந்தேகமேயில்லை; ஆனால், நம் நாவும் உடலும் உப்புக்குப் பழக்கப்பட்டு விட்டனவே? என்ன செய்வது அறியாமையால் உப்பைத் தின்று சீரழிகிறது மனித இனம்.  இரும்பைக்கூட அரிக்கும்  இந்த இரசாயனம்,உடலையும் உள்ளத்தையும் பாடாய்ப்படுத்துகிறது.அதனால்,மனிதன் உலகத்தைப் பாடாய்ப்படுத்துகிறான்.

உலகம் துன்ப மயம்: உப்பு இல்லாவிடில் சமையல் இல்லை .  உப்பு இல்லையெனில் களைப்பு இல்லை:நோய் இல்லை:உப்பால் உடற்சூடு அதிகரிக்கும். இதயத் துடிப்பு , இரத்த அழுத்தம், மூச்சு எண்ணிக்கை அதிகமாகி பதட்டமும் படபடப்பும் உண்டாகும்.

இப்படி எல்லாக் கெடுதல்களையும் கொண்டு வந்து சேர்த்தது உப்பு: உப்புக்காகப் புளிப்பையும், புளிப்புக்காக காரத்தையும், .காரத்திற்காக எண்ணையையும் உணவில் சேர்க்க வேண்டியதாகிறது:    உப்பைத் தவிர்த்தால் இவற்றைச் சேர்த்து வேக வைக்காமல்  ,உணவை மட்டும் நேரடியாக  உண்டு நோயின்றி வாழலாம்.

ஒவ்வொரு மனிதனும் 1-கிராம் உப்புக்கு 72-கிராம் தண்ணீரை உடம்பில் தேக்கி வைத்துக் கொள்கிறான்;2.5 லி.தண்ணீரைத் திணித்துக் கொள்கிறோம்  என்பதே பொருந்தும்.இதனால், இதயம், நுரையீரல் சுருங்கி  விரிய சிரமத்துக்கு உள்ளாகிறது ;
நன்றி: கூகிள் படங்கள்.

தக்க உணவுக்கு உப்பு தேவையில்லை.
நம் உடலுக்குப் பொருந்திய, தக்க உணவு என்பது தேங்காயும் பழங்களுமே; இவற்றுக்கு உப்பு தேவையா என்ன? அனால், அவற்றை  விட்டு  அரிசி, கோதுமை,சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற  உலர்ந்த உணவுப்பண்டங்களை நேரடியாக உண்டு வாழும்போது  இரத்த ஓட்டம் தடைபடுகிறது; எனவே, இவையெல்லாம்  மனித உடலுக்குப் பொருத்தமற்ற உணவுப் பண்டங்களாகும். அடுப்பெரிக்க விறகு பயன்படுவதைப் போல, உடலில் அதிக இரத்தத்தை  உண்டாக்கவும் ,அதிக தண்ணீரைத்  தேக்கவும் உப்பு உதவுகிறது. தவறான உணவுப்பண்டங்களை உண்டு வாழ உப்பு துணை போகிறது; உப்பு, மனிதனுக்கு, இந்த ஒரே ஒரு உதவியைச் செய்து  விட்டு  மற்றெல்லாத் துன்பங்களையும் கொண்டு வருகிறது.  
நன்றி: கூகிள் படங்கள்.

உப்பை விட்டால் ஏற்படும் நன்மைகள்  
உப்பை விட்டு, இயற்கை உணவுகளான தேங்காய், பழங்களை உண்டு வந்தால்  யோகாசனம்-பிராணாயாமம்,தியானம் ஆகியவற்றைச் செய்யாமலேயே  அதன் பயன்களை  அனுபவிக்க முடியும்.

ஆண்  பெண் வேறுபாடு இருக்காது; காமவெறி  இல்லை; பெண்களுக்கு மாதவிடாய் நின்று வருட விடாயாக  நீளும். 

விவசாயம்  செய்யத் தேவையிருக்காது; கனி தருமரங்களும், செடிகொடிகளுமே  தானாக விளைவதே போதுமானதாக இருக்கும். உப்பை விட்டால் 20மணி நேரம் களைப்பே இல்லாமல் உழைக்க முடியும்;  4மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கும். மூச்சின் எண்ணிக்கை நிமிடத்திற்கு  6 முதல் 8க்குள் அமையும்; நாடித்துடிப்பு சீராகும். இரத்தக்கொதிப்பு ஏற்படாது.

முடிவுரை: உப்பு உடலை உப்பை வைக்கும் உப்பினால் நரையும் புளியினால் திரையும் உண்டாகும்.எனவே,உப்பை விட்டு விடுதலை பெறுவோம்.விழித்துக் கொள்வோம்;உடல் நலம் பெறுவோம்.

(நெய்வேலி இயற்கை உணவாளர் திரு. சண்முகம்அவர்கள் ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கத்தில் ஆற்றிய உரையிலிருந்து )

நன்றியுடன் பெறப்பட்டது.

தொகுப்பு
மா.உலகநாதன், 
முனைவர் பட்ட ஆய்வாளர் (தஞ்சைப் பல்கலைக்கழகம்) ,
திருநீலக்குடி.
அலைப்பேசி:9442902334

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக