வியாழன், 12 மே, 2011

உப்பில்லா உணவு.

இசைஞானியின் பத்தியம்!
 [ Wednesday, 11-05-2011 19:21 ]
 
ilaiyaraja-11-05-11

இனிப்பை தவிர்ப்பார்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள். ஆனால் கடந்த இரண்டல்ல, ஐந்தல்ல, இருபதைந்து ஆண்டுகளாக உப்பை தன் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட்டு வருகிறாராம் இசைஞானி இளையராஜா. இத்தனைக்கும் இளையராஜாவுக்கு பெரிதாக எந்த வியாதியும் கிடையாது. கோபம், குரோதம், காமம், இத்யாதி, இத்யாதிகளை தவிர்ப்பதற்காகவே இப்படி பத்திய சாப்பாட்டினை பல வருடங்களாக ஃபாலோ செய்து வருகிறாராம் இளையராஜா! இளையராஜாவின் இந்த உப்பில்லா உணவு கட்டுப்பாடு கடந்த பலவருடங்களாக அவருடன் பணிபுரியும் சக கலைஞர்களுக்கே தெரியாது என்பது தான் ஆச்சர்யத்திலும் பெரிய அதிசயம்!

Courtesy: http://tamilstar.net/news-id-ilaiyaraja-11-05-11615.htm

2 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

உப்புக் குறைத்துச் சாப்பிட்டாலே, கை, கால் இழுக்கும், நரம்புகள் சுருட்டிக்கொள்ளும்னு சொல்றாங்களே?? இது எப்படி சாத்தியம்??? புரியலை! எனக்கு நடக்கையிலேயே கால்கள் எப்போ இழுத்துக்கும்னு சொல்ல முடியாது! அப்புறம் ஒரு அரை மணி நேரமாவது ஆகும் சரியாக. :)))))))

Ashwin Ji சொன்னது…

வாங்க கீதாஜி.
கை கால் இழுத்துக் கொள்வதற்கும், உப்பு குறைவாக சாப்பிடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உப்பு உணவுக்கு தேவை இல்லாத ஒன்று என்பது வெகு நாட்களாகவே நிரூபிக்கப்பட்ட உண்மை. உப்பு ரொம்ப தப்பு என்பதை விளக்க தனியாக ஒரு பதிவு தருகிறேன்.
பின்னூட்டத்துக்கு இதய நன்றி.

அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக